விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கியுள்ளப் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இன்று வெளியான அதிகாரபூர்வ போஸ்டரில், படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது தொடர்பாக நடிகை கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த கிறிஸ்துமஸுக்கு படத்தை வெளியிட நினைத்தோம்... ஆனால் ஒரு ட்விஸ்ட். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்! #கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago