ஹாலிவுட் செல்லும் ஆலியா பட் - குழந்தையைக் கவனிக்கும் ரன்பீர் கபூர்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர்களான ரன்பீர்க பூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா.

இந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஹா என்று பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததை அடுத்து ஆலியா பட் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். முதல்கட்டமாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஆலியா ஹாலிவுட் செல்லவிருப்பதால், குழந்தையை ரன்பீர் கவனிக்க உள்ளார்.

இதுதொடர்பாக ரன்பீர் அளித்துள்ள பேட்டியில், "அடுத்த 200 நாட்களுக்கு எனக்கு பெரிய வேலை இல்லை. ஆனால் ஆலியாவுக்கு வேலை இருக்கிறது. எனவே நாங்கள் எங்களின் வேலையை பகிர்ந்துகொள்ள உள்ளோம். ஆலியா பிசியாக இருக்கும்போது நான் பிரேக் எடுத்துக்கொண்டும், நான் பிசியாக இருக்கும்போது அவர் பிரேக் எடுத்துக்கொண்டும் குழந்தையை கவனித்துக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

மேலும்