தங்கல் படத்துக்காக உடல் எடையை கூட்டிக் குறைத்தது எப்படி?- ஆமிர்கான் விளக்கம்

'தங்கல்' படத்துக்காக உடல் எடையை முதலில் அதிகரித்து, பின்பு குறைத்தது எப்படி என ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.

'தங்கல்' படத்துக்காக ஆமிர்கான் எடை கூட்டி, குறைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முதலில் மகாவீர் கதாபாத்திரத்துக்காக கிட்டத்தட்ட 27 கிலோ எடை வரை ஏற்றியிருக்கிறார் ஆமிர்கான். பிறகு மீண்டும் அதை குறைத்துள்ளார்.

இது குறித்து பேசும்போது, "யார் எடை குறைக்க முயற்சி செய்தாலும் கலோரிகள் பற்றாக்குறை இருக்க வேண்டும். ஒரு மனிதரால் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் ஒரு நாளுக்கு 2000 கலோரிகள் வரை இழக்க முடியும். நான் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் எடை இழக்க பயிற்சி எடுக்கும் போது 1500 கலோரிகள்வரை சாப்பிட்டு 2000 கலோரிகள் வரை இழக்க பயிற்சி செய்தேன். அதனால் ஒரு நாளைக்கு 500 கலோரிகள் பற்றாக்குறையில் இருந்தேன். 3500 கலோரிகள் பற்றாக்குறை ஏற்பட்டால் 1 பவுண்ட் வரை எடை குறையும்.

ஒரு நாளைக்கு 500 கலோரிகள் இழக்கிறேன் என்றால் வாரத்தின் முடிவில் 1 பவுண்ட் எடை குறைந்திருப்பேன். 3500 கலோரிகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அதே போல ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் என்றால் ஒரு வாரத்தில் 2 பவுண்ட். ஒரு வாரத்துக்கு 1-2 பவுண்டுகள் வரை குறைப்பதுதான் ஆரோக்கியமானது.

வேகமாக எடை குறைக்க வேண்டும் என்பதால் 2000 கலோரிகள் பற்றாக்குறையாக உண்டேன். என்னால் ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் பற்றாக்குறைக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. ஆனால் முதல் 3 வாரங்களில் 5 கிலோ (13.2 பவுண்டுகள்) வரை எடை குறைத்தேன். ஆனால் இப்படி எடை குறைப்பதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன்.

இளம் மஹாவீர் கதாபாத்திரம் சரியான உடற்கட்டோடு இருக்க வேண்டும். நான் அதற்காக மீண்டும் 27 கிலோ குறைக்கவில்லை. உடம்பு கொழுப்பில் 9 சதவிதம் என இலக்கு வைத்துக் கொண்டேன். அதனால் 38 சதவீதத்திலிருந்த கொழுப்பு 9 சதவிதம் ஆனது. கொழுப்பு இல்லாமல் உடற்கட்டு வேண்டும் என நினைத்தேன். 15-17 கிலோக்கள் வரை தசை எடையைக் குறைத்தேன். எனது உயரத்துக்கு 7-8 கிலோ அதிகமாகவே இருந்தேன். அந்த எடை எனது தசையின் எடையே தவிர கொழுப்பின் எடை அல்ல". என்றார்.

ஆமிர்கான் உடல் எடைக் குறைப்பு குறித்து 'தங்கல்' படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE