உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை நடிகை தீபிகா படுகோன் அறிமுகம் செய்துவைக்கிறார். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், ஷாருக் கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்திருக்கிறார். ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனுடனான ’புராஜெக்ட் கே’, கணவர் ரண்வீர் சிங்கின் ’சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களிலும் தீபிகா நடித்து வருகிறார்.
தீபிகா படுகோனின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோன். இந்தியாவிலும் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் வாகை சூடியிருக்கும் பிரகாஷ் படுகோனை கௌரவிக்கும் வகையில் அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தந்தையை பின்பற்றி பேட்மிண்டன் பயிற்சியில் தீவிரமாக வளர்ந்த தீபிகாவை, அவரது ஆர்வம் சினிமாவில் கொண்டுபோய் சேர்த்தது.
இந்நிலையில், கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் நடிகை தீபிகா படுகோன் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார். இதனையொட்டி நடைபெறும் பிரம்மாண்ட விழாவிலும் அவர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago