தலை சிறந்த தந்தையைக் கொண்ட இரண்டு வெற்றி வீராங்கனைகளின் உண்மைக்கதையில் ஆமீர் கான் நடித்து வெளியாகி உள்ள படம் 'தங்கல்'. இதுகுறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமே >'தங்கல்'.. 2010 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மகாவீர் சிங் போகத் அவர்களின் மகள் கீதா போகத் மற்றும் அவரது தங்கை பபிதா ஆகியோரை மல்யுத்த களத்துக்குக் கொண்டு வரச் செய்த மகாவீரின் போராட்டமே படத்தின் கதை.
பெண்கள் செய்ய கூடாதவை, இது ஆணுக்கானது மட்டுமே என்று இன்றும் பொதுபுத்தியில் நிலைத்திருக்கும் எண்ணத்தின் மீது நடத்தப்பட்ட யுத்தமே 'தங்கல்'.
தங்கல் படம் பற்றி ஆயிரம் சொல்லுங்கள். காது கொடுக்கிறோம். ஆனால் இந்திய அளவில் வசூலில் அது சாதனை படைத்திருக்கிறது. விளையாட்டு வீரர்களைப் பற்றிய படத்தின் இந்த சாதனையைப் பெருமிதத்தோடு அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் பார்க்கிறோம். எங்களது எளிய விளையாட்டுக்களும் விலை போகின்றன. நன்றி இந்தியா என்னும் தேசமே!
Pk படத்தில் ஆமிர் கானுக்கு எதிராக பேசியவர்கள் தங்கல்(யுத்தம்) படத்தை ஒருமுறை பாருங்கள்.
ஆணுக்கு நிகராக பெண்ணும் சாதிக்கிறாள்- சாதிப்பாள் எனும் மனக்கருத்தை உணர்த்தும் பாடம்!
கதையின் கரு, நாயக, நாயகியர் தேர்வு, அவர்களின் தேர்ந்த நடிப்பு, இருக்கை நுனியில் அமர வைத்த இறுதிக் காட்சிகள், தங்கத்தை அவள் வென்றதும் நம் பெண்ணே வென்றதாக ஒரு சிலிர்ப்பு!
#தங்கல் மூவி பாத்தாச்சு.. ஒரு வார்த்தைல சொல்லனும்னா படம்னா இதுதான். இந்த படத்தை பார்க்கும்போது ரியலா ஒலிம்பிக் பாக்குற ஒரு உணர்வு.
ஆமிர் கானின் தங்கல் படம் குழந்தைகளுடன் கண்டு மகிழ அருமையான படம். மல்யுத்தத்தில் உலக அளவில் பங்கு பெற முடியாமல் தேசத்துக்காகத் தங்கம் பெற துடிக்கும் ஒரு கிராமத்து மனிதனின் கனவு அவர் மகள்கள் வழியே சிறகை விரித்து சிகரம் தொடுகிறது.
பிள்ளைகள் பெற்று, ரொட்டி சுட்டு, சமையலறையில் எழுதிக் கொண்டு இருக்கும் கிராமத்து பெண்களுக்கு மத்தியில் ஆணுக்கு இணையாக தன் மகள்களை சாதிக்க செய்த மகாவீர் போகாட் என்ற மனிதரின் உண்மைப் போராட்டம் திரை அரங்கில் மக்களின் கைதட்டலில் மரியாதை பெறுகிறது.
பெண்ணுடலை இன்றும் இனபெருக்க களமாக பார்த்துக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இது போன்ற படங்கள் அவசியம் கொண்டாடப்பட வேண்டும்!
'தங்கல்' தமிழில் பார்த்தேன். ஆமிர் கான் மேல் மரியாதை பன்மடங்கு கூடுகிறது. வேறு சில வகையறாக்களை நினைத்து ஒரு தமிழ் ரசிக மனம் புழுங்கிச் சாகுது.
தங்கல் படம் அல்ல, பாடம்.
தங்கமாய் மின்னுகிறது தங்கல். அமீர்கான் நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார்..
உண்மையிலேயே இது அமீரின் யுத்தம்தான். ஆம் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். அமீரின் உடல் மொழியை அவருக்கே உரித்தான திரைமொழியில் காண்க. #தங்கல்
தங்கல்(யுத்தம்)- குறிஞ்சிப்பூ. பெண்ணின் அருமை, பெருமையைப் பேசும் படம். பெண்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம்.
சாதிக்கிறதுக்கு பாலினம் தேவையில்லை, திறமையும், மனவலிமையும்தான் முக்கியம்னு அழுத்தமா பதிவு செஞ்சிருக்கிற படம். #பெண்களால்பெருமிதம்கொள்வோம்.
தங்கல் வழக்கமான படமல்ல! போர்க்களத்தில் சின்ன சின்ன மனித நுண்ணுணர்வுகளையும் நம் மனதிற்கு நெருக்கமாகத் தரும் படம்!
இந்த படத்துல இளைஞனாக, நடுத்தர வயதுடையவராக, வயதானவராக மூனு விதத்துலயும் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கார் ஆமீர்.
.
குத்துசண்டை படம்தானேன்னு நினைச்சா படத்தை நல்லா ரசிக்கும்படி எடுத்திருக்காங்க.
.
மொத்தத்தில் தங்கல் மனதில் தங்கல்.
கன்னிகளை பெற்றவர்கள் தங்க(ல்)ள் காலரை உயர்த்துங்கள்.
தங்கல் திரைப்படம் பார்த்தேன். படம் முழுவதும் ஆமிர் கானின் யதார்த்த நடிப்பு எனக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் பிடிக்கும். வயதுக்கேற்றாற் போல் உருவ வேறுபாட்டிலும் நம்மை வாய்பிளக்க வைத்திருக்கிறார். 10 நிமிடம் தான் இளமையாய் காண்பிக்கப்பட்டாலும் அவரின் எடையால் உடல் வேறுபாடு மறக்கமுடியவில்லை. முதல் பாதி படத்தின் முழுபாதி என்று சொல்லும் அளவிற்கு அமீர்கான் ஒரே மனிதனாக படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். இறுதி பத்து நிமிடம் தொடர்ந்து கைதட்டலாலும், விசிலாலும் அரங்கே அதிர்கிறது.
இறுதியில் கீதா வென்றதை அவர் அறிந்து சிறிதாக சிரிக்க தொடங்கியதும் அந்த 15 நொடிகள் அரங்கில் உள்ள அனைவரின் மனதில் இடம்பெற்று விட்டார். எதிரியை நம் நாட்டு போராளி சுத்தி புரட்டிப்போடும் காட்சி மிக மெதுவான மென்பொருளால் படம் பிடித்து காண்பித்துள்ளதால் என்னாலும் உணர்ச்சியை அடக்கமுடியாமல் விசில் அடிக்க வேண்டியதாயிற்று.
மொத்தத்தில் தங்கல் ஆமிர் கானுக்கு மற்றுமொரு வைரக்கல்.
தங்கல் - பல வருடங்கள் கழித்து கண்கள் கலங்கின, நெஞ்சம் நிறைந்தது! பொழுதுபோக்குக்காகவே திரையில் தோன்றும் நடிகர்கள் வாழும் களத்தில் சமூகத்திற்கான காவியங்களை படைக்கும் இவர்கள் கலையுலகின் உச்சம்.
போற்றப்பட வேண்டிய கலைஞர் அமீர் கான். இந்திய சினிமாவின் பொக்கிஷம். #தங்கல்
தங்கல் - ஒன்றுமே இல்லாத படங்களுக்கு ஆரவாரம் செய்யும் ரசிகர்களே இதோ நீங்கள் கொண்டாட வேண்டிய படம்.
*
தங்கல் - நல்ல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெல்லாது என்ற இலக்கணத்தை தகர்த்திருக்கிறது. தமிழ் இயக்குனர்கள் கவனியுங்கள்; நல்ல கதைக்கு முயலுங்கள்.
எப்படி இந்த இடத்துக்கு வந்தோம்னு கடைசி வரை மறக்கக்கூடாது #தங்கல்
பெண்களை பிள்ளைகளாக பெற்றவர்கள் பார்க்கவேண்டிய படம்...
சினிமா என்றால் எப்படி எடுப்பது என்று சில தமிழ் இயக்குனர்கள் கற்க வேண்டிய படம்...
தமிழ் சினிமாவின் இல்லாத மாயையில் இருக்கும் கதாநாயகர்கள் பார்க்க வேண்டிய படம்....
தங்கல் - படம் செம. தமிழ் ஹீரோக்கள் அமீர்கானிடம் கற்க வேண்டியது நிறைய. ரொம்ப நாளைக்கு பிறகு மனசுக்கு நிறைவான ஒரு ஞாயிறு மாலை.
என்னிக்கு ஹீரோயிசத்தை விட்டுவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கறாங்களோ அன்னைக்குதாங்க தமிழ் சினிமா உருப்புடும். #ஆமிர் கான் #தங்கல்
பெண் குழந்தைகள் சாபம் அல்ல சரித்திரம் படைக்கும் பேராற்றல் என்கின்றது தங்கல் படம்!!
பெண்களைக் கொண்டாடும் மிகச்சுமாரான படங்களையே தூக்கிவைத்துக் கொண்டாடும் எனக்கு இந்தப்படம் பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தான் இழந்த கனவுகளை எல்லாம் தன் பிள்ளைகளை வைத்துப் பெற்றோர்கள் அடைய நினைப்பது சரியா என்கின்ற மிகப்பெரிய கேள்வியை, குறிக்கோளே இல்லாமல் வெறும் கடமைக்காக பெண்களை வளர்க்கும் பெற்றோர்களுடன் ஒப்பிடும்போது அது எவ்வளவோ மேல் என்கிற நுட்பமான காட்சிகளேயே பதிலாக வைத்து கேள்வியை பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.
நேரடியாக அமர்ந்து போட்டியைக் காண்பதுபோல அவ்வளவு அழகாக மல்யுத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். கோழிக்கறி சாப்பிட்டுதான் விளையாடுவேன்னா வீட்டுக்குள்ளயே வராதே என அம்மாவே சொல்வது, போட்டிக்குத் தேவையான டிரவுசரை அணிந்துகொள்ளவே சமூகத்திடம் சங்கோஜப்பட்டு பெண்கள் நிற்கவேண்டிய சூழல் போன்ற கவனிக்கத்தக்க புறஅரசியல் காட்சிகளை போகிறபோக்கில் காட்டி இருக்கிறார்கள்.
பெண்கள் எந்தத் துறையை எடுத்துக்கொண்டு ஓடினாலும் ஆணுக்கு நிகராக வெற்றி பெற்றாக வேண்டுமென்கிற சவால் ஒருபுறம் இருந்தாலும், அது அடுத்துவரப்போகும் பெண்களின் எதிர்காலத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாமல் இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் அதிலே வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தோடு இரட்டைச் சுமையுடனேயே ஓடி ஆகவேண்டிய சூழல் சமூகத்தில் நிலவுவதையே இந்தப்படமும் மல்யுத்தப்போட்டியின் வழியாகப் பேசிச்செல்கின்றது.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago