ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிக்கும் ‘சலாம் வெங்கி’ இந்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘மித்ர் மை ஃப்ரண்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகை ரேவதி. இந்தப் படம் சுதா கொங்காரா, வி.பிரியா திரைக்கதை எழுதிய இப்படம் தேசிய விருதைப் பெற்றது. பின்னர் ‘பிர் மிலேங்கே’ என்ற இந்திப் படத்தை இயக்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரேவதி இயக்கும் படம் ‘சலாம் வெங்கி’. கஜோல் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தவிர ராகுல் போஸ், ராஜீவ் கண்டேல்வால், அஹானா கும்ரா, பிரகாஷ் ராஜ், பிரியா மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிதுன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ஒரு அழகான ஃபீல்குட் படத்திற்கான எல்லா அம்சங்களும் ட்ரெய்லரின் பிரதிபலிப்பதை காண முடிகிறது. வீரியமான வசனங்கள் அதற்கு துணை புரிகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மகனை காக்கும் ஒரு தாயின் போராட்டமாக ட்ரெய்லர் விரிகிறது. அழுத்தமான கதாபாத்திரத்தில் கஜோல் நடித்திருக்கிறார். வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலான இந்தத் ட்ரெய்லரின் இறுதியில் ஆமீர்கான் ஆச்சரியம் தருகிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பை ட்ரெய்லர் தூண்டியிருக்கிறது. ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
39 secs ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago