'பாலிவுட் பாட்சா' என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த ஆண்டு பல படங்கள் வெளியாக உள்ளன. இவை பாலிவுட் வசூலை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு செல்லும் என இந்தித் திரையுலகம் காத்திருக்கிறது.
பாலிவுட்டுக்கு 2022-ம் ஆண்டு மிகவும் மோசமான காலக்கட்டம். 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்2', 'புஷ்பா', 'விக்ரம்' உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வசூலை வாரிக் குவித்தன. ஆனால், இந்தியில் வெளியான படங்கள் எதுவும் இந்த ஆண்டு 'பிரம்மாஸ்திரா'வை தவிர்த்து பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக, கங்கனா ரணாவத்தின் 'தாகத்' இந்தாண்டின் மிக மோசமான தோல்வியைத் தழுவிய பாலிவுட் படம் என்ற அடையாளத்தைப் பெற்றது.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகிற்கு அடுத்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. காரணம், 2018-க்குப்பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மீண்டும் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் ராஜ்குமார் ஹிரானியின் படமும் வர இருக்கிறது. இவையெல்லாம் பாலிவுட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு பாலிவுட்டுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள். அந்த வகையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் பட்டியல் இதோ:
பதான்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'பதான்'. தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். ஆக்ஷன் - த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படம் 2023 ஜனவரி 25-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது.
» தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி
» திரைத்துறை துளிகள் | ‘காந்தாரா’வுக்குப் புகழாரம்; அறிவியல் கிரைம் த்ரில்லரில் பிரியாமணி
ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'ஜவான்'. விஜய் சேதுபதி வில்லனாகவும், நயன்தாரா, தீபிகா படுகோனே நடிக்கும் இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரிக்கிறார். அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
டைகர் 3: மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான், இம்ரான் ஹாஷ்மி, கத்ரீனா கைஃப், நடிக்கும் படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
டன்கி: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'டன்கி'. டாப்ஸி, விக்கி கௌஷல் நடிக்கும் படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரிக்கிறார். 2023-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago