பாலிவுட் 'விக்ரம் வேதா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் படத்தின் வசூல், பட்ஜெட்டை எட்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தை 'விக்ரம் வேதா' பெயருடன் இந்தியில் இயக்கியது படக்குழு. இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இதனால், பாலிவுட்டில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படம் செப்டம்பர் 30-ல் திரையரங்குகளில் வெளியானது. வட மாநிலங்களில் படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. படம் முதல் நாளில் ரூ.10.58 கோடியையும், இரண்டாவது நாளில் 12.51 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ.13.85 கோடியையும் வசூலித்து மூன்று நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.36.94 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
» “நாம் வந்த பாதையை மறக்கக் கூடாது” - இந்துஜாவுக்கு ஆர்.கே.சுரேஷ் அறிவுரை
» ‘ஜெய்பீம்’, ‘கேஜிஎஃப் 2’-வை பின்னுக்குத் தள்ளி ஐஎம்டிபி-யில் முன்னேறிய ‘காந்தாரா’
முதல் வாரத்தை பொறுத்தவரை படம் ரூ.60 கோடியை எட்டவே போராட வேண்டியிருந்தது. தற்போது படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மொத்தம் ரூ. 126.24 கோடியையே படம் வசூலித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் என்டர்டெயின்ட்மெண்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி என கூறப்படும் நிலையில், இரண்டு வாரம் கழித்தும் படத்தால் அந்த வசூலை எட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நேர்மறையான விமர்சனத்தை படம் பெற்றபோதிலும் பெரிய அளவில் வசூலை ஈட்ட முடியவில்லை என்கின்றனர் திரை வர்த்தகர்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago