“இதுதான் முதல் படி...” - ட்விட்டரில் இருந்து வெளியேறினார் கரண் ஜோஹர்

By செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் சினிமாவின் பிரபல முகங்களில் ஒருவர் கரண் ஜோஹர். அவர் இப்போது ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். அது குறித்து அவரே தனது கடைசி ட்வீட் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

50 வயதான கரண் ஜோஹர் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், காஸ்ட்யூம் டிசைனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர். ஷாருக்கானின் வெற்றிப்படமான ‘குச் குச் ஹோத்தா ஹை’ படம் தான் இவர் இயக்கிய முதல் படம். அதேநேரத்தில் தொடர்ந்து பாப்புலர் படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்போது அவர் ட்விட்டர் தளத்தில் இருந்து விலகி உள்ளார். “அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜிகளை விரும்புகிறேன். அதன் முதல் படியாக ட்விட்டர் தளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை” என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக ட்விட்டரில் புறக்கணிப்பு முழக்கங்கள் ஹாஷ்டேக் வடிவில் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் காரணமாக அவர் வெளியேறி இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்போது அவர் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துள்ளார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்