பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? - அதீத கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் வரும் ராமன் கதாபாத்திரமாக பிரபாஸ் நடித்திருக்கிறார். காவிக்கொடியுடன், அனுமான் உள்ளிட்டவர்களுடன் பிரபாஸ் நடந்து வரும் காட்சிகள் ராமாயணத்தை தழுவி படம் உருவாகியிருப்பதை உறுதி செய்கின்றன. தர்மம் - அதர்மத்திற்கு இடையேயான போராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் டீசரில் படத்தின் டைட்டில் வரும் காட்சியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கம் ஒலிக்கிறது. படத்தின் டீசர் வரும் அயோத்தியின் சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 01.43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த டீசர். மோஷன் கேப்ச்சர் முறையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நீருக்கடியில் பிரபாஸ் தவம் செய்வது போல இந்த டீசரின் இரண்டாவது ஷாட் தொடங்குகிறது. அம்பும் வில்லும் ஏந்தி எதிரில் வரும் படைகளை துவம்சம் செய்கிறார் பிரபாஸ். இந்த டீசரின் சில காட்சிகள் வழக்கமான வகையில் ஷூட் செய்யப்பட்டுள்ளது போல உள்ளது. சில காட்சிகள் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் போல உள்ளது.
» 5 நிமிடத்திற்கு ஒருமுறை செல்போன் பார்க்கிறோம்; வாசிப்பு குறைந்துவிட்டது - இயக்குநர் வெற்றிமாறன்
» சார் எக்ஸாம் ஃபீஸூக்கு ஹெல்ப் பண்ணுங்க - ட்விட்டரில் கேட்டதும் உதவிய ஜி.வி.பிரகாஷ்குமார்
இதனை கவனித்த நெட்டிசன்கள் சோட்டா பீம், டெம்பிள் ரன் போன்றவற்றை தங்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் இந்த டீசருடன் ஒப்பிடும் போது படத்தை காட்டிலும் சோட்டா பீம், டெம்பிள் ரன்னின் மேக்கிங்க சிறப்பு என ட்ரோல் செய்து வருவதை பார்க்க முடிகிறது. சிலர் ரஜினிகாந்த் நடைப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தையும் ஒப்பிட்டு வருகின்றனர். பிரபாஸ் ரசிகர்கள் சிலரும் இந்த டீசரை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர். அதனை அவர்களும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
32 secs ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago