சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இந்தப் படத்தின் டீசர் வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரின் சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தை தழுவி இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளது. தற்போது போஸ்ட் புராடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 2023, ஜனவரியில் இந்தப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் நடிகை கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு பணியை கார்த்திக் பழனி கவனித்துக் கொண்டுள்ளார். டி சீரிஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளிவர உள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று அயோத்தி நகரில் உள்ள சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பிரபாஸ் உட்பட பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago