மகப்பேறு மருத்துவராக கவனம் ஈர்க்கும் ஆயுஷ்மான் குரானா - ‘டாக்டர் ஜி’ ட்ரெய்லர் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி உள்ள ‘டாக்டர் ஜி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மகப்பேறு மருத்துவராக நடித்து கவனம் ஈர்த்துள்ளார் அவர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம், படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளே.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் ஆயுஷ்மான் குரானா. அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சாமானியனாகவே இருக்கும். அதற்கு உதாரணமாக பதாய் ஹோ, பாலா போன்ற படங்களை சொல்லலாம். அந்தாதூன், ஆர்டிக்கிள் 15 போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் அனேக் படம் வெளியாகி இருந்தது. பாக்ஸ் ஆபீசில் இவரது படம் டீசன்டான வசூலை அள்ளும்.

இந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘டாக்டர் ஜி’ படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. வரும் அக்டோபர் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இதில் டாக்டர் உதய் குப்தா என்ற கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் நடித்துள்ளார். ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் அவர் மகப்பேறு மருத்துவர் எனத் தெரிகிறது.

சுமார் 2.55 நிமிடங்கள் ஓடுகிறது இந்தப் படத்தின் ட்ரெய்லர். நடிகை ராகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் நடித்துள்ளார். காமெடி ஜானரில் படம் உருவாகி உள்ளது. அனுபூதி காஷ்யப் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் அனுராக் காஷ்யபின் சகோதரி ஆவார்.

ட்ரெய்லர் லிங்க்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்