“நீங்கள் ராமர், கிருஷ்ணர், காந்தியைப் போல...” - பிரதமர் மோடிக்கு கங்கனா ரனாவத் பிறந்தநாள் வாழ்த்து 

By செய்திப்பிரிவு

''ராமரைப் போல, கிருஷ்ணரைப் போல, காந்தியைப் போல, நீங்கள் அழியாதவர். என்றென்றும் நிலைத்திருக்க கூடியவர்'' என பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு தலைவர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடியுடனான தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டு 'உலகத்தின் சக்திவாய்ந்த மனிதர்' என மோடியை அவர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது வாழ்த்து குறிப்பில், ''இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் மோடி. ரயில்வே நடைமேடைகளில் சிறுவயதில் டீ விற்றதில் தொடங்கி உலகின் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்தது வரையிலான உங்களின் பயணம் அபாரமானது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்.

ராமரைப் போல, கிருஷ்ணரைப் போல, காந்தியைப் போல, நீங்கள் அழியாதவர். என்றென்றும் நிலைத்திருக்க கூடியவர். உங்கள் பாரம்பரியத்தை எதைக்கொண்டும் அழிக்க முடியாது; அதனால்தான் நான் உங்களை அவதாரம் என்று அழைக்கிறேன். நீங்கள் எங்கள் தலைவராக கிடைத்திருப்பதை ஆசீர்வாதமாக உணர்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்