பிரம்மாஸ்திரா முதல் நாள் வசூல் ரூ.75 கோடி

By செய்திப்பிரிவு

ரன்பீர் கபூர் நடிப்பில் திரையரங்குகளில் நேற்று (செப்டம்பர் 9) வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதா பச்சன், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார். சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்திய அளவில் படம் ரூ.36-38 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்