மும்பை: அபிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் ’குட் பை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. விகாஸ் பால் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'குட் பை’ படத்தின் இந்த ட்ரெய்லர் மூன்று நிமிடங்களைக் கொண்டுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களான அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா ஆகியோரே பெரும்பாலான காட்சிகளில் அங்கம் வகிக்கிறார்கள்.
இப்படத்தின் மையக் கருவாக நீனா குப்தாவின் மரணமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் டார்க் - ஹ்யூமர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, சுனில் க்ரோவர் முதலான துணைக் கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கிறது.
‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழில் ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியா முழுவதும் அறியும் முகமாக மாறி இருக்கிறார். இந்த நிலையில், ‘குட் பை’ திரைப்படம் ராஷ்மிகா மந்தனாவின் நேரடி இந்திப் படமாக அமையவுள்ளது. இந்தத் திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
» “அமைச்சர்கள், அதிகாரிகளை திமுக அரசு நம்பவில்லை” - இபிஎஸ் முன்வைக்கும் ‘குழு’ விமர்சனம்
» ‘வடகொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள், ஏவுகணைகளை வாங்கும் ரஷ்யா’
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago