“இந்திய சினிமாவை பாலிவுட், டோலிவுட் என பிரிக்காதீர்” - கரண் ஜோஹர்

By செய்திப்பிரிவு

''இந்திய சினிமாவை பாலிவுட், டோலிவுட் என பிரிக்காதீர்கள். மாறாக இந்திய சினிமாவை 'இந்தியத் திரைப்படத் துறை' என்று குறிப்பிடுங்கள்'' என இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த 'பிரம்மாஸ்திரா' பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''நாங்கள் எங்களின் சிறிய பாதையின் வழியாக நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் படத்தை கொண்டு செல்ல விரும்புகிறோம். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சொன்னதைப்போல, இது இந்திய சினிமா அவ்வளவுதான். இதை வேறு எப்படியும் அழைக்க வேண்டாம்.

நாம் தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என 'வுட்'ஐ சேர்த்துகொள்கிறோம். நான் இனி 'வுட்' இல்லை. அதைக் கடந்து வெளியில் வருவோம். நாங்கள் இந்திய சினிமாவில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கிறோம் என்பதை பெருமையுடன் சொல்வேன். இனி ஒவ்வொரு படமும் இந்திய சினிமாவில் இருந்துதான் வெளிவரும்'' என்றார்.

இதேபோல 'கேஜிஎஃப் 2' படத்தின் ப்ரமோஷனின்போது நடிகர் யஷ், ''இது ஒரே துறை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. நிறையவே மாறிவிட்டது. இல்லாவிட்டால் வெவ்வேறு திரைத் துறையிலிருந்து நடிக்கும் நடிகர்களை பான் இந்தியா என்ற பெயரில் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்