“ஒருவரின் நம்பிக்கையையே உருவகேலி சிதைத்துவிடுகிறது” - ஹ்யூமா குரேஷி

By செய்திப்பிரிவு

'ஒருவரின் நம்பிக்கையை உருவக் கேலி முழுமையாக சிதைத்துவிடுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு மூலம் மக்களின் மனநிலையில் மாற்றங்களை கொண்டுவர நாங்கள் விரும்பினோம்'' என்று பாலிவுட் நடிகை ஹ்யூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

சத்ரம் ரமணி இயக்கத்தில் ஹ்யூமா குரேஷி, சோனாக்‌ஷி சின்ஹா, ஜாகீர் இக்பால் நடிக்கும் திரைப்படம் 'டபுள் எக்ஸல்'. உருவக் கேலி, உடல் எடையை முன்வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து பேசிய ஹ்யூமா குரேஷி, ''பெண்களாகிய நாங்கள், ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது.

உருவக் கேலி நமக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. உருவக் கேலி என்பது ஒருவரின் நம்பிக்கையை முழுமையாக சிதைத்துவிடுகிறது. இந்தப் பிரச்னையை மையப்படுத்திய திரைப்படத்தை உருவாக்கி, இது தொடர்பான ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்க விரும்பினோம்.

அதனை ஆவணப்படமாக எடுப்பத்தில் எங்களுக்கு விருப்பமில்லை. அதை ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினோம்'' என்றார். மேலும், இந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டியுள்ளதாகவும் ஹ்யூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE