இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டின் இரு பெரும் நட்சத்திரங்களான ஷாருக்கானும் சல்மான்கானும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
27 வருடத்திற்கு முன்பு அதாவது 1995-ம் ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கானும், சல்மான் கானும் இணைந்து நடித்த திரைப்படம் 'கரண் அர்ஜூன்'. இப்படம் வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு நடிகர்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தது.
அப்படியான காம்போவை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்த்து காத்திக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக 'குச் குச் ஹோதா ஹை', 'ஹம் தும்ஹாரே ஹை சனம்', ஆகிய இரண்டு படங்களிலும் குறைந்த சீன்களில் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.
இந்நிலையில், இந்தியில் ‘கஜினி’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாலிவுட் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் இரு பெரும் நட்சத்திரங்களான ஷாருக்கானையும் சல்மான் கானையும் வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்து சல்மான்கானும் ஷாருக்கானும் இந்தப் படம் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. நடிகர் அமீர்கான் வேண்டுகோளின் பேரில்தான் ஷாருக்கும் சல்மானும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago