“மேடம் அல்ல, சார்!”... இந்திரா காந்தியாக கங்கனா - ‘எமர்ஜென்சி’ முதல் பார்வை

By செய்திப்பிரிவு

கங்கனா ரனாவத் நடிக்கும் 'எமர்ஜென்சி' படத்தின் முதல் பார்வை ப்ரோமோ வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். அத்தோடு படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ரித்தேஷ் ஷா.

இந்நிலையில், படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ப்ரோமோ வடிவிலான வீடியோ மூலம் முதல் பார்வையை டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

முதல் பார்வை வீடியோவை பொறுத்தவரை, கருமையான கூந்தலின் முன்பக்கம் மட்டும் நரைத்த வெள்ளை முடியுடன், கண்ணாடி அணிந்துகொண்டு, இந்திரா காந்திக்கே உண்டான காட்டன் சேலையில் காட்சியளிக்கிறார் கங்கனா. பேசும் வசனங்களில் இடையே உதட்டை உள்ளிழுப்பது என இந்திரா காந்தியின் உடல் மொழியை பிரதிபலிக்க முயன்றுள்ளார். அதேசமயம் இந்தப் படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படம் அல்ல என்பதையும் கங்கனா தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும், அந்த வீடியோவில், செயலாளர் ஒருவர் கங்கனாவிடம், 'அமெரிக்க அதிபர் உங்களை சாருக்கு பதிலாக மேடம் என்று அழைக்கலாமா? என கேட்கிறார்' என கூற, அதற்கு பதிலளிக்கும் அவர், ''என்னுடைய அலுவலகத்தில் எல்லோரும் என்னை மேடம் என்று அழைப்பதில்லை மாறாக 'சார்' என்று தான் அழைக்கிறார்கள்'' என்பதை அமெரிக்க அதிபரிடம் தெரிவித்துவிடுங்கள் என்கிறார். அத்துடன் அந்த வீடியோ முடிகிறது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

ப்ரோமோ வீடியோ இங்கே:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்