'ஜவான்' போன்ற திரைப்படங்கள் நான் இதுவரை நடிக்காத ஒன்று - ஷாருக்கான்

By செய்திப்பிரிவு

'ஜவான்' போன்ற திரைப்படங்கள் நான் இதுவரை நடித்திராத வகை திரைப்படம் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அப்போது சல்மான் கானின் 'டைகர் 3' படத்தில் ஷாருக்கன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல ஷாருக்கானின் 'பதான்' படத்தில், சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், ''சல்மானுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு வேலை நிமித்தமானதல்ல. அது நேசித்து நடிப்பது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்கள் அருமையாக இருந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர் படங்களில் நடிக்கிறோம். 'ஜீரோ' படத்தில் அவர் என்னுடன் ஒரு பாடல் பாடினார். நானும் அவருடன் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

அட்லீ இயக்கத்தில் நடிக்கும் 'பதான்' படம் குறித்து அவர் பேசுகையில், '' அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள், அவை மாஸ் கமர்ஷியல் படங்கள். அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. நான் சிலவற்றைக் கொண்டு வருகிறேன், அவர் சிலவற்றைக் கொண்டுவருகிறார். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்