டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள 'சபாஷ் மிது' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'சபாஷ் மிது'. இப்படத்தில் மிதாலி ராஜ் பாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார்.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை முதலில் இயக்கி வந்தவர் ராகுல் டோலக்யா. தனிப்பட்ட காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகவே ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கி முடித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னால் கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே கட்டமாக முடித்தது படக்குழு. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
» தீபாவளி ரேஸில் அஜித், கார்த்தியுடன் இணையும் ஜெயம் ரவி?
» கர்நாடக முதல்வர் பார்த்து கண்ணீர்விட்ட ‘777 சார்லி’ படத்துக்கு வரிவிலக்கு
ட்ரெய்லரை பொறுத்தவரை, மிதாலி ராஜின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் டாப்ஸி. படத்துக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு ட்ரெய்லரிலேயே தெரிகிறது. படத்துக்காக பிரத்யேக கிரிக்கெட் பயிற்சியையும் டாப்ஸி மேற்கொண்டிருக்கிறார். மேலும், கிரிக்கெட் விளையாட்டுக்குள் இருக்கும் அரசியலையும், ஆண், பெண் பாகுபாடு குறித்தும் படம் பேச முயற்சிப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பெண் ஒருவர் கிரிக்கெட் போன்ற ஆடவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் விளையாட்டில் நுழைந்து எப்படி சாதிக்கிறார் என்பது தான் கதை. அதுதான் மிதாலி ராஜின் வாழ்விலும் நடந்தது. படமும் அதையேதான் பேசுகிறது என்பதை ட்ரெய்லர் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இதைத்தாண்டி 'சபாஷ் மிது' வழக்கமான ஸ்போர்ட்ஸ் படங்களிலிருந்து எப்படி விலகி தனித்து நிற்கிறது என்பது தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். ஜூன் 15-ல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி வெளியாகியுள்ள ட்ரெய்லர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'சபாஷ் மிது' படத்தின் ட்ரைலர் இதோ :
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago