''சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் அழுத்தம் இருந்தது. என் மூக்கை, தாடையை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்'' என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே 'விக்ரம் வேதா' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் 'கபாலி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், ஆரம்ப காலத்தில் சினிமாவுக்குள் நுழையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''சினிமாவுக்கு வந்த புதிதில் அழுத்தம் இருந்தது. என்னைச் சந்தித்த சிலர், முகத்திலும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்படி கூறினார்கள்.
முதலில், மூக்கை சர்ஜரி மூலம் மாற்றச் சொன்னார்கள். பிறகு தாடையில். மார்பகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். பின் கன்னங்களில், கால்களில் சொன்னார்கள். முடியில் வண்ணம் தீட்டச் சொன்னார்கள். 30 வருடங்களாக வண்ணம் தீட்டியதில்லை. இதைக் கேட்டபின் எனக்கிருந்த அழுத்தம் மாறி, கோபம்தான் வந்தது. மற்றவர்கள் செய்யும் வேலைகளை, நானும் ஏன் செய்ய வேண்டும்? இவை அனைத்தும் முன்பை விட என் உடலை இன்னும் அதிகமாக நேசிக்க உதவியது'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago