சோபிக்காத அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ - முதல் நாளில் ரூ.10 கோடி மட்டுமே வசூல்

By செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத காரணத்தால், முதல் நாளான நேற்று இந்திய அளவில் ரு.10 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று (ஜூன் 3) வெளியானது.

படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால், நேற்று ஒரே நாளில் இந்திய அளவில் 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் ரூ.10.70 கோடியை வசூலித்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் குறைவான வசூலுடன் தொடங்கியிருக்கிறது 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம். அதேசமயம் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் இந்திய அளவில் ரூ.32 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்