இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா ரனாவத் 

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தின் மூலம் கவனம் பெற்றார். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவரின் 'தாகத்' படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா, சாஸ்வதா சட்டர்ஜி உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை ரஜ்னீஷ் கய் இயக்கியிருந்தார்.

இந்தப் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் ஏமாற்றத்தைத் தந்தது. படம் ரிலீஸான எட்டாவது நாளில் வெறும் 20 பேர் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர். இந்தப் படத்தைப்போல மோசமான தோல்வியை அண்மையில் எந்தபடமும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை கங்கனா 'எமர்ஜென்சி' என்ற படத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கங்கனாவே தயாரித்து இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இந்திரா காந்தியின் 'பயோபிக்' படமாக இல்லாமல் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த அரசியல் விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்