பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’

By செய்திப்பிரிவு

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. படம் வெளியாகி இதுவரை 12 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் திவ்யாங் தக்கர் (Divyang Thakkar) இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' (Jayeshbhai Jordaar). ஆதித்யா ஜோப்ராவின் யாஷ் ராஜ் ஃப்லீம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் உடன் ஷாலினி பாண்டே, தீக்‌ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதமே வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம் ஒமைக்ரான் கொரோனா வகை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. நாடு முழுவதும் இப்படம் முதல் நாள் வசூலாக 3 கோடி ரூபாயை ஈட்டியது. இரண்டாம் நாள் 4 கோடியையும், 3வது நாளான நேற்று ரூ.4.50 - 4.75 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தமாக படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், ஏறக்குறைய ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்து படம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனிடையே, கடந்த மே 6-ம் தேதி வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் (Doctor Strange - In The Multiverse Of Madness minted) திரைப்படம் இந்தியாவில் மட்டும் இரண்டாவது வாரமாக ரூ.12 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதில் நேற்று மட்டும் ரூ.4.50 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்