தமிழ்நாட்டில் பல உண்மைகளும், டெல்லி ஃபைல்ஸ் திரைப்படத்தில் இடம் பெறும் என காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்ற இந்த படத்தைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் படம் டெல்லி ஃபைல்ஸ். இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ள அவர், ''நான் அடுத்தாக இயக்க போகும் டெல்லி ஃபைல்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டின் பல உண்மைகளை சொல்லும்.
இந்த படம் டெல்லியைப் பற்றியது மட்டுமல்ல. முகலாயர்கள் ஆட்சி தொடங்கி பிரிட்டிங் ஆட்சி வரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைக்களம் அமையும். பெரிய அளவிலான இந்து நாகரீகம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.
மேலும் நாம் பலவீனமானவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். மேற்கத்திய ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லது படையெடுப்பாளர்களிடமிருந்து தான் நாம் அனைத்தையும் கற்றுக்கொண்டோம். அவை முற்றிலும் தவறானவை. வரலாறு ஆதாரம் மற்றும் உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். கதை அடிப்படையில் இருக்கக்கூடாது. இந்தியாவில், பிரச்சினை என்னவென்றால், நிறைய பேர் வரலாற்றை கதை அல்லது அவர்களின் அரசியல் மற்றும் இந்தியாவின் அரசியல் அடிப்படையில் எழுதுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
» 'சிங் இன் தி ரெயின்' - வடிவேலுவுடன் பிரபு தேவா... வைரலாகும் வீடியோ
» ரைசா வில்சன், பிந்துமாதவி ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் நாகா - புராணத்தை அடிப்படையாக கொண்ட கதை
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago