ஒவ்வோர் இந்தியரும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்க்க வேண்டும்: ஆமீர் கான்

By செய்திப்பிரிவு

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை ஒவ்வோர் இந்தியரும் பார்க்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பேசியுள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை விவரிக்கும் இப்படம் சர்ச்சைகளை தாண்டி வியாபார ரீதியாக நல்ல வசூலை ஈட்டி வருகிறது. ரூ.100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை தாண்டி குவித்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இப்படம் தொடர்பாக பேசியுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' புரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட ஆமீர் கான், "ஒவ்வொரு இந்தியரும் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது" என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலரும் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வரும் நிலையில், ஆமீர் கான் அப்படி பேசியிருக்கும் காட்சிகள் இப்போது வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்