’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக பதிவாகும் வாக்குகள்: நெறிப்படுத்தும் IMDb

By செய்திப்பிரிவு

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வழக்கத்துக்கு மாறான முறையில் வாக்குகள் பதிவுச் செய்யப்படுவதாகவும், அதை நெறிப்படுத்தி வருவதாகவும் ஐஎம்டிபி தெரிவித்துள்ளது.

இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இதில் ரசிகர்கள் படத்திற்கு 10-க்கு தாங்கள் விரும்பும் புள்ளிகளை (ரேட்டிங்) வழங்கலாம்.

இந்த நிலையில், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக சர்ச்சையான முறையில் வாக்குகள் பதிவாகி வந்திருப்பதாக ஐஎம்டிபி தளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்டிபி தளம் அளித்த விளக்கத்தில்,“ ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு சர்ச்சையான முறையில் வழக்கத்திற்கு மாறான வாக்குப் பதிவானதை எங்களின் மதிப்பீட்டு வழிமுறைப் பிரிவு கண்டறிந்துள்ளது. எங்கள் மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு மாற்று முறையில் படத்திற்கு வந்துள்ள் வாக்கை கணக்கெடுக்கும் முறை தற்போது பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கமளித்துள்ளது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரிவிலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. பாஜகவினரும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் இப்படத்துக்கு இணையத்தில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்