இந்தியாவின் டிஸ்கோ இசை ஜாம்பவான் பாடகர், இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவின் டிஸ்கோ இசை ஜாம்வான் என அறியப்படும் பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி காலமானார். அவருக்கு வயது 69. இந்தி, வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹரி திங்கள்கிழமையன்று தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்தது.

பப்பி லஹரி 1970 முதல் 80 வரையிலான காலக்கட்டத்தில் டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப் படுத்தினார். சல்தே சல்தே, டிஸ்கோ டான்ஸர், ஷராபி ஆகிய பாடல்கள் அவரது இசையில் ஆல் டைம் ஹிட் பட்டியலில் இருப்பவை. கடைசியாக 2020ல் அவரது இசையில் பாகி 3 படம் வெளியானது. அதில் பன்காஸ் என்ற பாடல் ஹிட் ஆனது.

கடைசியாக இந்தி பிக்பாஸ் சீசன் 15ல், நடிகர் சல்மான் கானுடன் பப்பி லஹரி கலந்து கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் பப்பி லஹரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் மற்ற உடல் உபாதைகள் காரணமாக உயிரிழந்தார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் இவரது இசையில் பாடும் வானம்பாடி, அபூர்வ சகோதரிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற படங்கள் வெளியாகின. இவற்றில் ஆனந்த் பாபு, ஜீவிதா நடிப்பில் வெளியான பாடும் வானம்பாடி படத்தில் 'நானொரு டிஸ்கோ டான்ஸர்' பாடல் ஹிட். அந்தப் பாடலில் ஆனந்த் பாபுவின் நடனமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2014ல் இவர் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் அவருக்கு, மேற்குவங்கத்தின் ஸ்ரீராம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் திரினமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்