தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜன 20) இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 88 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
ட்ரெய்லரில் அலிஷா (தீபிகா படுகோன்), அலிஷாவின் கசின் டியா (அனன்யா பாண்டே), டியாவின் வருங்கால கணவர் ஸெய்ன் (சித்தாந்த் சதுர்வேதி) ஆகியோரது வாழ்வு நமக்கு காட்டப்படுகிறது. ட்ரெய்லரில்ன் தொடக்கத்தில் தென்றலைப் போல மிகவும் மகிழ்ச்சியாக செல்லும் இவர்களது மூவரது வாழ்விலும் அலிஷா மற்றும் ஸெய்ன் இடையே ஏற்படும் காதலால் பெரும் புயல் வீசுகிறது. நவீன உறவுமுறைகளின் பிரதிபலிப்பு என்று இப்படத்தின் இயக்குநர் ஷகுன் பத்ரா இப்படத்தைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது ட்ரெய்லரை பார்க்கும்போதே உறுதியாகிறது.
நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா - சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன.
» ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'
» ட்ரெய்லர் பார்வை: வீரமே வாகை சூடும் - ஈர்க்கும் வசனங்கள்; சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள்
கவுஷல் ஷாவின் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான ஒளிப்பதிவு காட்சிகளின் தாக்கத்தை பார்வையாளருக்கு கடத்துகின்றன. அன்குர் திவாரியின் பின்னணி இசையும் ட்ரெய்லருக்கு வலு சேர்த்துள்ளது. ட்ரெய்லர் முடிந்தபின்னரும் அந்த பியானோ இசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
வழக்கமாக அமேசான் ப்ரைமில் வெளியாகும் பெரும்பாலான ட்ரெய்லர்களைப் போலவே இதிலும் படத்தின் முழுக்கதையும் சொல்லப்பட்டு விட்டாலும், படமாக பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு ‘கெஹ்ரையான்’ ஏமாற்றத்தை தராது என்று நம்புவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago