ஜூலன்... வியத்தகு வாழ்வனுபவம் - அடுத்த இன்னிங்ஸில் களமிறங்கிய அனுஷ்கா சர்மா

By செய்திப்பிரிவு

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் கதையான ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இப்படத்தின் டீசரையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமாக இருந்தவர் ஜூலன் கோஸ்வாமி. இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’. இப்படத்தில் ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். ப்ரோசித் ராய் இயக்கும் இப்படத்துக்கு அபிஷேக் பானர்ஜி கதை, திரைக்கதை எழுதுகிறார்.

இப்படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா அத்துடன் ஒரு பதிவையும் எழுதியுள்ளார். அதில் அவர், "இது மிகவும் தனிச்சிறப்பு மிக்க ஒரு திரைப்படம். காரணம், இது ஒரு மிகப்பெரிய தியாகத்தின் கதை. முன்னாள் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ திரைப்படம், மகளிர் கிரிக்கெட் உலகின் கண்களை திறக்கும். ஜூலன் ஒரு கிரிக்கெட் வீரராகவும், உலக அரங்கில் தனது நாட்டை பெருமைப்படுத்தவும் முடிவு செய்த காலகட்டம் என்பது பெண்கள் விளையாட நினைப்பதற்கு கூட மிகவும் கடினமானதாக இருந்தது. இந்த திரைப்படம் ஜூலனின் வாழ்க்கை மற்றும் மகளிர் கிரிக்கெட்டை வடிவமைத்த பல நிகழ்வுகளின் வியத்தகு நினைவுகூரலாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்கா சர்மா இறுதியாக 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஜீரோ’ படத்தின் ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு அனுஷ்காவுக்கு குழந்தை பிறந்ததால் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது முன்று வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்