தனுஷ் ஒரு குழந்தை போன்றவர்: சாரா அலி கான் பேட்டி

By செய்திப்பிரிவு

தனுஷ் ஒரு குழந்தை போன்றவர் என்று நடிகை சாரா அலி கான் கூறியுள்ளார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

சமீபத்தில் சாரா அலி கான் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் குறித்தும், தனுஷுடன் பணியாற்றியது குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''தனுஷை முதன்முதலில் ‘அத்ரங்கி ரே’ படத்தின் போட்டோ ஷூட்டின் போதுதான் பார்த்தேன். அவர் மிகவும் அமைதியான, பணிவான ஒரு நபராக இருந்தார். அவர் அதீத திறமை வாய்ந்த நபராக இருந்தாலும் மிகுந்து பணிவுடன் நடந்துகொண்டார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர் எவ்வளவு திறமையான நடிகர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால், அவர் எவ்வளவு பணிவானவர், எவ்வளவு ஆதரவானவர் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு குழந்தை போன்றவர். அவரும் ஆனந்த்ஜியும் ஒன்றாக இருந்தால் குழந்தைகள்போல நடந்து கொள்வார்கள்''.

இவ்வாறு சாரா அலி கான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்