'சூர்யவன்ஷி' வெளியீடு: ராஜமெளலி வாழ்த்து

By செய்திப்பிரிவு

நீண்ட மாதங்கள் கழித்து வெளியாகும் 'சூர்யவன்ஷி' படத்துக்கு ராஜமெளலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 'சூர்யவன்ஷி' திரைப்படம் நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தைப் பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.

'சூர்யவன்ஷி' படக்குழுவினருக்கு இயக்குநர் ராஜமெளலி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், " ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். திரையரங்க வியாபாரத்துக்குப் புத்துயிர் கொடுக்கவேண்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் பொறுமையுடன் காத்திருந்த படக்குழுவினரையும் மனதாரப் பாராட்டுகிறேன்" என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை இந்தியில் வெளியிட்டவர் கரண் ஜோஹர். அவர் 'சூர்யவன்ஷி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்