அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் 'கோர்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'பெல் பாட்டம்' படத்தைத் தொடர்ந்து 'சூர்யவன்ஷி', 'அத்ரங்கி ரே', 'பிரித்விராஜ்', 'பச்சன் பாண்டே', 'ரக்ஷா பந்தன்', 'ராம் சேது', 'மிஷன் சிண்ட்ரெல்லா', 'ஓ மை காட் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அக்ஷய் குமார். இதில் நவம்பர் 5-ம் தேதி 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, அக்ஷய் குமார் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மேஜர் அயன் கார்டோசோவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. 'கோர்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சஞ்சய் செளகான் இயக்கவுள்ளார்.
அக்ஷய் குமார் வழங்க இயக்குநர் ஆனந்த் எல்.ராய் மற்றும் ஹிம்மன்சூ சர்மா இணைந்து தயாரிக்கிறார்கள். 'கோர்கா' கதையை சஞ்சய் செளகான் உடன் இணைந்து நீரஜ் யாதவும் எழுதியுள்ளார். இதில் அக்ஷய் குமாருடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago