'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு அரபு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வந்தன. இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு அரபு நாடுகளில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. புஷ்கர் - காயத்ரி இயக்கி வரும் இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தி ரீமேக்கிற்கும் 'விக்ரம் வேதா' என்றே தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago