'டிரைவிங் லைசென்ஸ்' ரீமேக் மூலம் இந்தியிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ப்ரித்விராஜ்.
மலையாளத்தில் ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார் ப்ரித்விராஜ். முழுக்க நடிப்பில் இவர் கவனம் செலுத்தினாலும், தயாரிப்புப் பொறுப்புகளை இவரது மனைவி சுப்ரியா மேனன் கவனித்துக் கொள்கிறார்.
ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் 'டிரைவிங் லைசென்ஸ்'. லால் ஜூனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகருக்கும், அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது. இதன் இந்தி ரீமேக்கில் ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் மற்றும் சுரஜ் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஸ்மியும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இந்தியிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ப்ரித்விராஜ்.
'டிரைவிங் லைசென்ஸ்' இந்தி ரீமேக்கை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ப்ரித்விராஜ்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago