'டிரைவிங் லைசென்ஸ்' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் அக்ஷய் குமாரும், இம்ரான் ஹாஷ்மியும் நடிப்பது உறுதியாகியுள்ளது.
லால் ஜூனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'டிரைவிங் லைசென்ஸ்'. நடிகருக்கும், அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம்சரண் கைப்பற்றியிருந்தார். ரவிதேஜா நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியிருக்கிறது.
இன்னொரு பக்கம் இதன் இந்தி ரீமேக்கை பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்த ரீமேக்கை 'குட் நியூஸ்' படத்தின் இயக்குநர் ராஜ் மேத்தா இயக்குகிறார். ப்ரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமாரும், சுரஜ் நடித்த கதாபாத்திரத்தில் இம்ரானும் நடிக்கவிருக்கின்றனர்.
» இந்தப் படக்குழுவின் அடுத்த படத்தை மூன்று மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கிறேன்: ஞானவேல் ராஜா
» புஷ்பா அப்டேட்: ராஷ்மிகா கதாபாத்திரத்தின் பெயர், போஸ்டர் வெளியீடு
ஒரு வாகன ஆய்வாளருக்குப் பெரிய திரைப்பட நட்சத்திரத்துக்கும் நடக்கும் மோதலே இந்தப் படம். சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியில் உருவாகவுள்ளது. 2022 ஜனவரி முதல், பிரிட்டனில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. ஒரே கட்டமாக 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி, படத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago