ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் வெப் சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெஜினா.
பல்வேறு வெப் சீரிஸ்களைத் தயாரித்து வருகிறது அமேசான் ஓடிடி தளம். இந்தத் தளத்தில் மாபெரும் வெற்றியடைந்த 'தி பேமிலி மேன்', 'தி பேமிலி மேன் 2' ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கியவர்கள் ராஜ் மற்றும் டிகே. இந்தத் தொடர்களின் வெற்றியால், இவர்களுடைய அடுத்த தொடருக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்கள் ராஜ் மற்றும் டிகே. மும்பை மற்றும் கோவாவில் ஷூட்டிங் நடந்தது.
இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெஜினா. இவருடைய காட்சிகளைத் தற்போது மும்பையில் படமாக்கி வருகிறது படக்குழு. இந்தப் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் செல்லும் என்று கூறப்படுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் சீரிஸ் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த வெப் சீரிஸை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago