தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்ய முயற்சிப்பதாக கங்கணா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறி கங்கணாவின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. அன்று முதல் தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் கங்கணா பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாவிலிருந்து யாரோ ஒருவர் ஹேக் செய்ய முயற்சிப்பதாக கங்கணா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று இரவு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீனாவிலிருந்து யாரோ ஒருவர் ஹேக் செய்ய முயற்சிப்பதாக எனக்கு இன்ஸ்டகிராமில் எச்சரிக்கை செய்தி வந்தது. இன்று காலை தாலிபான்கள் குறித்து நான் போட்ட பதிவுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. என்னுடைய கணக்கும் செயலிழந்துள்ளது. இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட பிறகே என்னால் தற்போது அதற்குள் நுழைய முடிகிறது. ஆனால் பதிவு எழுத முயலும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தானாவே லாக் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய சர்வதேச சதியாக இருக்கலாம்.
» 'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட்: செல்வராகவன் ட்வீட்டால் உருவாகும் சர்ச்சை
» தனது சாதனையை சோனு சூட்டுக்கு அர்ப்பணித்த வீரர்: சோனு சூட் நெகிழ்ச்சி
தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி' படத்தில் கங்கணா நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தியில் ‘தாக்கட்’, ’தேஜாஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இது தவிர இந்திரா காந்தியின் பயோபிக் திரைப்படமாக உருவாகவுள்ள ‘எமெர்ஜன்ஸி’ படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளார். நம்பவே முடியவில்லை.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago