பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கேத்ரீனா கைஃப் நடிக்கும் 'ஜீ லே ஸரா’

By ஏஎன்ஐ

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஆலியா பட் மற்றும் கேத்ரீனா கைஃப் என மூன்று பேரும் இணைந்து 'ஜீ லே ஸரா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளனர்.

'தில் சஹதா ஹை' திரைப்படத்தின் 20வது ஆண்டை இன்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். இதையொட்டி, அந்தப் படத்தை இயக்கிய ஃபர்ஹான் அக்தர், தனது அடுத்த படமாக 'ஜீ லே ஸரா இருக்கும்' என்று அறிவித்துள்ளார்.

"சாலை வழிப்பயணம் குறித்து யாராவது பேசினீர்களா? இயக்குநராக எனது அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொல்கிரேன். தில் சஹதா ஹை வெளியான நாளின் 20வது ஆண்டை விட இதை அறிவிக்கச் சிறப்பான தருணம் இருக்க முடியுமா?" என்று ஃபர்ஹான் ட்வீட் செய்துள்லார்.

நட்பைப் பற்றிய, நண்பர்களைப் பற்றிய 'ஜிந்தகி நா மிலேகி தோபாரா' என்கிற வெற்றிப்படத்தின் இயக்குநரும் ஃபர்ஹான் அக்தரே. 2022ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நடிப்பது குறித்து படத்தின் நாயகிகள் மூவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

2019-ஆம் ஆண்டு ஆலியா பட் மற்றும் கேத்ரீனா கைஃபுடன் தான் தொலைப்பேசியில் பேசியதாகவும், அப்போது மீண்டும் இந்தியில் நடிக்க வேண்டும் என்பது குறித்த உரையாடலே, முழுக்க பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு படத்தில் நாம் நடிக்க வேண்டும் என்று மூவரும் பேசியதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

சரியாக அதே நேரத்தில் ஃபர்ஹான் அக்தரும், பெண் நண்பர்கள் மூவரின் பயணம் குறித்த திரைக்கதை ஒன்றை எழுதி வந்ததாகவும், எல்லாம் சரியான சமயத்தில் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்