இந்தியில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்': அனில் கபூர் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். 'கூகுள் குட்டப்பா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்கவுள்ளார். 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் ரீமேக் உரிமையை ஃபைத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக விக்கி ரஜனி கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் தமிழில் வெளியான ‘அருவி’ படத்தின் ரீமேக்கையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்