‘டூஃபான்’ படத்துக்காக உடல் எடையைக் கூட்டி, குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபர்ஹான் அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஃபர்ஹான் அக்தர் நடித்துள்ள படம் ‘டூஃபான்’. இதில் ஃபர்ஹான் அக்தர் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் மிருனல் தாகூர், ப்ரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், ஃபர்ஹான் அக்தரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்துக்காக கடுமையான பயிற்சிகளை ஃபர்ஹான் அக்தர் மேற்கொண்டார். மேலும் படத்திலும் பல காட்சிகளில் உடல் எடையைக் கூட்டியும், குறைத்தும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 20) ‘டூஃபான்’ படத்துக்காக உடல் எடையைக் கூட்டி, குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அப்போது தனது எடையையும் ஃபர்ஹான் அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், ''என்னவொரு பயணம். 18 மாதங்கள் அயராத உழைப்பு. ஆனால், ஒவ்வொரு சொட்டு வியர்வையும், தசைகளின் வலியும், கூட்டி, குறைக்கப்பட்ட ஒவ்வொரு எடையும் பலனைக் கொடுத்திருக்கிறது'' என்று ஃபர்ஹான் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபர்ஹானின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஃபர்ஹானைப் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago