2-வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்ய உள்ள நிலையில் ஹைதராபாத் பெண்ணை மணக்கிறாரா ஆமிர் கான்?

By என். மகேஷ்குமார்

பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் விரைவில் தனது 2-வதுமனைவி கிரண் ராவைவிவாகரத்து செய்ய உள்ளார்.இதனை தொடர்ந்து ஹைதராபாத்தை சேர்ந்த தங்கால் பட நடிகை பாத்திமா சனா ஷேக்கை 3-வதாக அவர் திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆமிர் கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஈரா என்கிற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தனது லகான்இந்திப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவைகடந்த 2005-ம் ஆண்டு திருமணம்செய்துகொண்டார். 16 ஆண்டுகளுக்கு பிறகு கிரண் ராவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தங்கால் படத்தில் ஆமிர் கானின் மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கே காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. இதனால்தான் தற்போது ஆமிர் கான் விவாகரத்து வரைசென்றுள்ளார் என பேசி வருகின்றனர்.

நடிகை பாத்திமா சனா ஷேக்ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அதன் பின்னர் மும்பைக்கு சென்று சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் தங்கால் படத்தில் ஆமிர் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரும் இருவரும் பல விருந்துகள், பார்ட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.

இவரைத்தான் ஆமிர் கான் 3-வதாக திருமணம் செய்ய உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. 56 வயதாகும் நடிகர் ஆமிர் கான், 3-வதாக 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருப்பதே இப்போது பாலிவுட்டில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்