பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நாயகனாக நடிக்கும் படத்தை அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் ‘இப்போதைக்கு பட ரிலீஸ் சாத்தியமா என்று தெரியவில்லை. அதுவரை எங்களுக்காக ஒரு நடன வீடியோ வெளியிடலாமே?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஷாருக் கான் ‘இல்லை நண்பா, ஏராளமான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன’ என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் கேட்ட அடுத்த படம் குறித்த கேள்விக்கு ‘இப்போதைக்கு பட வெளியீடு குறித்து மிகவும் கவனத்துடனும் பொறுமையுடனும் முடிவெடுப்பதே சிறந்தது’ என்று பதிலளித்துள்ளார் ஷாருக் கான்.
‘தற்போது ரெட் சில்லீஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சமையலறையில் என்ன மாதிரியான படங்கள் சமைக்கப்படுகின்றன?’ என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஷாருக் கான் ‘மசாலா மிகவும் தூக்கலான சில படங்கள்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago