‘சபாஷ் மிது’ படத்திலிருந்து இயக்குநர் விலகல்

By செய்திப்பிரிவு

பிரபல கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘சபாஷ் மிது’. இப்படத்தில் மிதாலி ராஜ் பாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை முதலில் இயக்கி வந்தவர் ராகுல் தோலக்கியா. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் தேசிய விருது வென்ற இயக்குநரான ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தில் இயக்கவுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தோலக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயக்கியே ஆகவேண்டும் என்ற வகையில் சில திரைப்படங்கள் இருக்கும். ‘சபாஷ் மிது’ அப்படியான ஒரு படம். அப்படத்தின் கதையை படித்த உடனே இதை நாம் இயக்கியே ஆகவேண்டும் என்று நினைத்தேன். அது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணத்தை நான் தற்போது முடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளேன்.

தற்போது இந்த கனவின் ஒரு பகுதியாக என்னால் தொடர இயலாது. ஆனால் படக்குழுவினர் இந்த கனவை நிறைவேற்ற நான் உறுதுணையாக இருப்பேன். கரோனா ஒவ்வொருவரின் பணித்திட்டங்களையும் புரட்டி போட்டு விட்டது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. தயாரிப்பாளர்களுக்கு இப்படத்தை உருவாக்க ஒரு கனவு இருந்தது. அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்