பழம்பெரும் இந்தி நடிகை சாதனா உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74.
‘ஹம் தோனோ’, ‘லவ் இன் சிம்லா’, ‘வக்த்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்தி திரையுலகின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாதனா.
1960-களில் இந்தி திரையுலகை தன்பக்கம் ஈர்த்த இவர், தேவ் ஆனந்த் உட்பட பல்வேறு கதாநாயகர்களுடன் நடித்து எண்ணற்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
‘லவ் இன் சிம்லா’ பட இயக்குனர் ராம கிருஷ்ண நவ்யாருடன் ஏற்பட்ட காதலால், படப்பிடிப்பு தளத்திலேயே அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏராளமான மர்மப் படங்களில் நடித்ததால், இவர் மர்ம பெண் என்றே அழைக்கப்பட்டார். அன்றைய இளம் பெண்கள், இவரைப் போலவே சிகை அலங்காரம் செய்து கொள்ள மிகவும் விரும்பினர். அந்த அளவுக்கு மிகுந்த பிரபலமான நாயகியாக வலம் வந்தார்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மும்பையின் சான்டா குரூஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாடகி லதா மங்கேஷ்கர் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago