அக்‌ஷய் குமார் படத்தில் இணைந்த சுனில் ஷெட்டி மகன் 

By செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படத்தில் சுனில் ஷெட்டியின் மகன் அஹான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சுனில் ஷெட்டி. இந்தியில் ‘பல்வான்’, ‘ரக்‌ஷக்’, ‘பார்டர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘12பி’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அஹான் ஷெட்டி.

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் ரீமேக்கான ‘டடாப்’ என்ற இந்திப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மிலன் லுத்ரியா இயக்கும் இப்படம் இறுதிக்கட்டப் பணிகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

‘டடாப்’ படத்தின் தயாரிப்பாளரான சாஜித் நாதியாட்வாலா, அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தைத் தயாரிக்கிறார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் அஹான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள 'சூர்யவன்ஷி' படம் கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக வெளீயீட்டுக்குக் காத்திருக்கிறது. சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஓராண்டுக்கும் மேலாக வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்