பாலிவுட் திரைப்படத் தொழிலாளர்களுக்கு யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் கரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார் ஆதித்யா சோப்ரா.
இதுகுறித்து யாஷ் ராஜ் பிலிம்ஸ் துணைத் தலைவர் அக்ஷய் விதானி கூறியிருப்பதாவது:
''யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தியபின், எங்கள் படங்களில் பணிபுரியும் குழுவினருக்குத் தடுப்பூசி செலுத்தினோம். தற்போது பாலிவுட் திரைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகத் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் எங்கள் துறையின் தினக்கூலிப் பணியாளர்கள் மீண்டும் வேலைக்கும் வரவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பொருளாதார ரீதியான உறுதித் தன்மை கிடைக்கும்.
இந்த முகாம் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. திரைத்துறை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏராளமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாமின் மூலம் ஒரு நாளைக்கு 3500 முதல் 4000 தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ள திரைத்துறையை மீண்டும் தூக்கி நிறுத்த யாஷ்ராஜ் பிலிம்ஸ் தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறது''.
» தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் - அமிதாப் பச்சன் வேண்டுகோள்
» ‘என் குடும்பமே சமந்தா ரசிகர்களாகி விட்டார்கள்’- ரகுல் ப்ரீத் சிங் புகழாரம்
இவ்வாறு ஆதித்யா சோப்ரா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago