அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.
முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸன் வெளியாகியுள்ளது. ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீஸனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவே இரண்டாவது சீஸனையும் இயக்கியுள்ளனர்.
இந்த வெப் சீரிஸுக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல சமந்தாவின் நடிப்பையும் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ‘பேமிலி மேன் 2’ மற்றும் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினருக்கு ரகுல் ப்ரீத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
» ரஜினி எழுந்து நின்று கைதட்டிய சம்பவம்: மாளவிகா மோகனன் பகிர்வு
» 'ஜகமே தந்திரம்' படத்தில் பாடல்கள் நீக்கம் ஏன்?- கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
‘பேமிலி மேன் 2’ தொடர் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் நடித்துள்ள அனைவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய் எத்தகைய நடிப்பை வழங்கியிருந்தார் என்பதை சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
சமந்தாவுக்கு தலைவணங்குகிறேன். நீங்கள் ஒரு நெருப்புப் பெண். ராஜி கதாபாத்திரத்தை நீங்க அட்டகாசமான வகையில் ஏற்று நடித்திருக்கிறீர்கள். என்னைப் போலவே என் குடும்பமும் உங்கள் ரசிகர்களாகிவிட்டார்கள்.
இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago