நடிகை யாமி கவுதம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் என கவனம் செலுத்தி வருபவர் யாமி கவுதம். தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியில் பிரதானமாகப் பணிபுரிந்து வருகிறார் யாமி கவுதம்.
2019-ம் ஆண்டு வெளியான 'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தில் நடித்தார். ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விக்கி கெளசல், பரேஷ் ராவல், யாமி கவுதம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஆதித்யா தர் - யாமி கவுதம் இருவருக்கும் காதல் உருவானது. அதனைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
» அடுத்த ரஜினி படத்தை இயக்குகிறேனா? - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
» நீங்கள் வழிகாட்டிய பாதை: தந்தை மறைவு குறித்து ஜி.என்.ஆர். குமாரவேலன் உருக்கம்
ஆதித்யா தர் - யாமி கவுதம் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து தங்களுடைய ட்விட்டர் பதிவில், "எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குகொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துகளையும் கோருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பதிவுடன் தங்களுடைய திருமணப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். ஆதித்யா தர் - யாமி கவுதம் இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago